தேன் சாப்பிட்டால்

தேன் என்பது, சர்க்கரையின் இயற்கை மூலச்சத்து தான். தேனில், ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. தினமும் பாலில் விட்டுச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மருந்தை தேனில் குழைத்து தருவதுண்டு. ஆனால், யாராக இருந்தாலும், அதிகமாக சாப்பிடக்கூடாது.

ப்ரோட்டீன் அதிகம்

பால், முட்டை, சோயா மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. அதுபோல, காய்கறிகள், சப்பாத்தி, பழங்கள், உலர் பழங்களிலும் உள்ளது. இவற்றில் சிலருக்கு சில பழங்கள், காய்கறிகள், பால் போன்றவை அலர்ஜியாக இருக்கலாம். அதற்காக அவர்கள் தங்கள் உணவு முறையை மாற்றி, ஒரு முறை, புரோட்டீன் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் குறைந்த அளவு புரோட்டீன் சத்துள்ள உணவு சாப்பிடலாம்.

அடிக்கடி தலைவலியா

எல்லா தலைவலிகளுக்கும் ஒரே மாதிரியான காரணம் இருக்காது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வித காரணம் இருக்கும். சிலருக்கு மூக்குக் கண்ணாடி மாற்றினால் தலைவலி போய்விடும். சிலருக்கு இரவு தூக்கம் இல்லாததால், பகல் வேளையில் தலைவலி வரும்; சோர்வு இருக்கும்; வேலையில் ஈடுபாடு வராது. இப்படி இருக்கும் பட்சத்தில், நீங்கள் தலைவலிக்கு அடிக்கடி மாத்திரை சாப்பிடக் கூடாது. மனோதத்துவ நிபுணரை போய்ப்பார்த்து, சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இரவில் தூங்கினால், பகலில் எல்லா பிரச்னைகளும் போய்விடும்.

அல்சர் அலட்சியம்

சிலருக்கு அல்சர் இருக்கும். அதாவது, வயிற்றுப் புண்! ஆனால், ஏதோ, ஆன்டாசிட் மாத்திரை சாப்பிட்டு விட்டு, சும்மா இருப்பர். இப்படியே, ஆண்டுக்கணக்கில் கூட தள்ளிப்போடுவர். இது ரொம்ப தவறு. அல்சர் என்று கண்டுபிடிக்கப் பட்டால், உடனே, டாக்டர் எண்டஸ்கோபி மூலம் உறுதி செய்வார். அப்படி உறுதி செய்து விட்டால், ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியா இருக்கிறதா என்று சோதனை செய்வர். அதன் பின், புண்ணை ஆற வைக்க, தகுந்த மாத்திரைகள் தருவர். இரண்டு வாரத்தில், அல்சர் போயே போச்.

பசும்பால் சரியா?

பசும்பாலில் உள்ள கொலஸ்ட்ரால், சிலருக்கு பிரச்னை தரும். அதனால், அவர்களுக்கு ரத்தத்தில், கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால், கொழுப்பு நீக்கப்பட்ட பசும்பால் அருந்துவது நல்லது.

கொழுப்பு நீக்கப்பட்டநிலையில் உள்ள பால் மூலம், தயிர், பனீர் உருவாக்கி சாப்பிடலாம்.

எருமைப்பால்

பசும்பாலை விட, குறைந்த கொழுப்புள்ள எருமைப்பால் நல்லது தான். அதனால் தான் விவரம் அறிந்த பலரும் எருமைப்பாலை சாப்பிடுவர். பசும்பாலை விட, எருமைப்பாலில் சத்துக்கள் அதிகம். பசும்பாலை விட 12 சதவீதம் புரோட்டீன் அதிகம். வைட்டமின் ஏ தயாமின், ரிபோப்ளோவின், நிகோடினிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை எருமைப்பாலில் அதிகம்.மொத்தத்தில் கொழுப்பு நீக்கப்பட்ட பால், ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால், எல்லா சத்துக்களும் கிடைத்துவிடும்.

நான்கு டம்ளர்!

காலையில் எழுந்தால், குடிக்க காபி இருக்கிறதா, படிக்க பேப்பர் இருக்கிறதா என்று, பார்ப்பவரா நீங்கள்? இனி சிறிது மாற்றம் செய்யுங்கள். பல் துலக்கிய பின், நான்கு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், உடலில் விஷத் தன்மையுள்ள எல்லாம் நீங்கி விடும்; நாள் முழுக்க சுறுசுறுப்பு இருக்கும்.

கோபத்தோடு சாப்பிடாதீங்க! உடலுக்கு கேடாம்!

சிலர், அரக்கபரக்க சாப்பிடுவர் தினமும்! கேட்டால், காலைல எழுந்ததும் ஏகப்பட்ட வேலைகள்; இதில், சாப்பிட நேரம் இருக்கா...என்ன? என்று அலுத்துக் கொள்வர். இப்படி சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. திட்டமிடப்படாமல் செயல்படுவதால் தான் இப்படி நேர்கிறது. தினமும் காலை படுக்கையில் இருந்து எழுகிறோம்; காலையில் சிற்றுண்டி முதல் இரவு டின்னர் வரை நேரம் குறித்து சாப்பிட்டலாம். என்ன தான், டென்ஷன் இருந்தாலும், சாப்பாட்டு விஷயத்தில் கண்டிப்பு தேவை.

பிசினசில் இருப்பவராக இருந்தாலும், ஊர் விட்டு ஊர் போகும் வேலை செய்பவராக இருந்தாலும், சாப்பிடுவதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. அதிலும், நம் கோபதாபங்களை எல்லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம் உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் டாக்டர்கள். உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செல்கள்! அவற்றுக்கு முக்கிய தேவை ஆன்டி ஆக்சிடெண்ட் என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளது.

அது தான் உடலில் உள்ள செல்களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும். அமெரிக்க நிபுணர்கள், சமீபத்தில், 3,300 பேரிடம், ஆன்லைன் மூலம் சர்வே நடத்தினர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர். விருந்துகளில் சிலர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும். இதனால், என்ன தான் டென்ஷன் இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம்.

Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M