தீக்காயங்கள் ஏற்பட்டால்

  • தீக்காயங்கள் ஏற்பட்டால், முதல் உதவியாக காயத்தின் இங்க் ஊத்துவது, எண்ணெய் போடுவது எல்லாம் தவிர்க்க வேண்டிய செயல்கள்.

  • தீக்காயங்கள் பட்டவுடன் அந்த வெப்பத்தினால் செல்கள் சேதமடைந்து காயம் ஏற்படுகிறது. அதனால் முதலில் நாம் செய்ய வேண்டியது, காயம்பட்ட இடத்தில் உஷ்ணத்தைக் குறைப்பதுதான். எண்ணெய் போடுவதால் வெப்பமானது வெளியேற முடியாமல் உள்ளேயே தங்கி, மேலும் ஆழமாக செல்களைச் சேதப்படுத்தும். வேறு எதை காயத்தின் மீது ஊற்றினாலும் வெப்பமானது தொடர்ந்து தணியாது.

  • எப்பவுமே காயம்பட்ட இடத்தில் சுமார் அரைமணி நேரமாவது தொடர்ந்து தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பதுதான் சரியான முதலுதவி. ஏதாவது பைப்பில் தண்ணீரைத் திறந்துவிட்டு தொடர்ச்சியாக காயத்தில் படும்படி செய்ய வேண்டும். காயத்தின் எரிச்சல் தீரும் வரை அப்படி தண்ணீரை ஊற்றிவிட்டால் காயத்தின் தீவிரம் குறையும்.

  • சூட்டை வேகமாகக் குறைக்கிறேன் என்று சிலர் ஐஸ் கட்டி, ஐஸ்வாட்டர் போன்றவற்றை வைப்பார்கள். அதுவும் தவறு. நார்மல் டெம்ப்ரேச்சரில் ரன்னிங் வாட்டரை விடுவது ஒன்றுதான் சரி! இந்த முதலுதவி முடிந்ததும் உடனடியாக டாக்டரை அணுகி, அவர் சொல்லும் கிரீமைத்தான் காயத்துக்குப் போட வேண்டும். காயத்தின் தன்மை, அது பட்ட இடத்தின் தன்மை புரியாமல் இஷ்டத்துக்கு கடையில் ஏதோ ஒரு கிரீமை வாங்கித் தடவுவது எல்லாம் செய்யவே கூடாது!
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M