ஹெல்த் டிப்ஸ்

  • முகம் பொலிவாகவும், உடல் ஒல்லியாகவும் இருந்துட்டா மட்டும் அழகு கிடையாதுங்க. உடல் ஆரோக்கியமா இருக்கணும்... அதான் அழகு! இயல்பான ஒரு மனுஷனுக்கு ஒரு நாளைக்கு 2500 கலோரி அளவுக்கான உணவு கிடைத்தாலே போதும்ங்க. அதுவே கூடுதலா அதிக வேலை செய்றவங்க 3000 கலோரி அளவுக்கு உணவு சாப்பிடணும் இது மாதிரி சில விஷயங்களை கடைபிடிச்சாலே அழகும் ஆரோக்கியமும் வந்து சேரும்

  • கண்ட கண்ட ஜூஸ்களை சாப்பிடறதை விட்டுட்டு ஒரு நாளைக்கு ஒரு க்ளாஸ் ஆரஞ்சுப்பழ ஜூஸ் சாப்பிட்டா உடம்புக்கு ரொம்பவும் நல்லதுங்க. இதனால சிறுநீரகப் பிரச்னைகள் எல்லாம் குணமாகும். மாம்பழம் சாப்டா இரத்த அழுத்தம் சரியாகும்.

  • கண் பார்வை சரியாகணுமா? ஆரஞ்சு, பப்பாளி கேரட் போன்ற பழம் + காய்களை சாப்பிட்டுப் பாருங்க. பார்வை சும்மா ‘பளிச்’னு ஆகும்

  • காலேஜூக்கு வரும்போது சிலர் அவசரமா சாப்பிடாம ஓடி வந்திடுறாங்க. அப்படி வரவேக் கூடாது. ஏன்னா இரவு முழுக்க நம்ம வயிறு காலியாயிருந்து அந்த ப்ரேக்கை உடைக்கிறது ப்ரேக்ஃபஸ்ட். எனவே காலை நேரத்துல இட்லி, ப்ரட், சாலட், ப்ரூட்ஸ் இந்த மாதிரி உணவுகளை கண்டிப்பா எடுத்துக்கிறது நல்லது. மதியத்துக்கு வெஜிடேபிள்ஸ், கூட்டு, புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கணும். இரவு நேரங்களில் சப்பாத்தி இல்லைன்னா ஏதாவது டிபன் சாப்பிடலாம் டயட்ல இருக்கிறவங்க இதை ஃபாலோ பண்ணலாம்.

  • சாப்பிடும்போது ஒவ்வொருத்தரும் வாழைத்தண்டை பொரியல் பண்ணி சாப்பிடணும். அப்படி சாப்பிடறதால மலச்சிக்கலும் வராது, கிட்னியில கல்லும் வராது. உடம்புக்கு சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நீர்ச்சத்து வேணும்னு நினைக்கிறவங்க சாப்பாட்டுல தினமும் கீரை சேர்த்துக்கிட்டாப் போதும்

  • அதையெல்லாம்விட, அஜினோமோட்டோ உணவுப் பொருட்களை தவிர்க்கணும் ருசியா இருக்குங்கிறதுக்காக காசு கொடுத்து நோய்களை வாங்கக்கூடாது. இதனால் கேன்சர், நரம்புத் தளர்ச்சின்னு ஏகப்பட்ட பிரச்னைகள் வர்றதா மருத்துவர்கள் சொல்றாங்க.

  • தினம் ஒரு க்ளாஸ் பால் குடிச்சா அதுல இருக்கிற கால்சியம் சத்து மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டதுங்க. மேலும், பேரீச்சம் பழத்தை தேன்ல ஊற வெச்சு சாப்ட்டா இரும்புச் சத்து அதிகமாகி மூளை வளர்ச்சியும் சிறப்பா இருக்கும்.

  • இப்போதெல்லாம் ஃபார்ஸ்ட் ஃபுட் சாப்பிடுவது ஒரு ஃபேஷனாகவே ஆயிடுச்சு. அதுக்கெல்லாம் நோ சொல்லிட்டு அவல், வேர்க்கடலை, பிஸ்தா, பொட்டுக்கடலை, வெஜ் ஐயிட்டம்ஸ், பழ வகைகளை அதிகமா சாப்பிடலாம். அல்சர் போன்ற வயிறு உபாதைகள் வராம தடுக்க முடியும்.

  • பெப்சி, கோக் மாதிரி கேஸ் பிராப்ளத்தை உண்டு பண்ற பானங்கள் சாப்பிடுறதை தவிர்த்து பியூர் மாம்பழத்தைச் சாப்பிடலாம். அதுவும் ஐஸ் போடாம சாப்பிட்டாதான் முழுமையான விட்டமின்ஸ் கிடைக்கும். கேன்சரை தடுக்கக்கூடிய சக்தி மாம்பழத்திற்குண்டு.

  • அய்யோ எனக்கு பசிக்கவே மாட்டேங்குதே என் வயிறுக்கு என்ன ஆச்சோ, ஏதோ ஆச்சோன்னு கவலைப்படுறவங்க பாதாம் பருப்பை இரவு முழுக்க ஊர வெச்சு காலைல சாப்பிட்டா போதும் நல்லா பசி எடுக்கும் நல்ல புரோட்டின் சத்தும் அதுல அடங்கியிருக்கு.

  • பெண்கள் அதிகமா மீன் உணவு வகைகளை சாப்பிட்டா மார்பக புற்று நோய் வராம பாதுகாத்துக்களாம்.

  • மாத்திரை சாப்பிடும்போது ரொம்பவும் கவனம் தேவை. பலர் டீ, பால் போன்ற பொருட்களில் கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்கணும். சாதாரண தண்ணீர்ல குடிக்கணும். இல்லைன்னா கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

  • காலையில் கொய்யா, மாலையில் திராட்சை சாப்பிடணும். கொய்யா இரத்தத்துல இருக்குற நச்சுத் தன்மையை அகற்றக்கூடியது. திராட்சை இரத்தத்தை சுத்திகரித்து புது இரத்தத்தைக் கொடுக்கும்.

  • சரியான நேரப்படி உணவு உண்ணமுடியவில்லை ஆகையினால அதுக்கு பதிலா விட்டமின் டேப்ளட்களை அதிகமா சாப்பிட ஆரம்பிச்சுடுறாங்க. இப்படி அளவுக்கு அதிகமா மாத்திரைகளை சாப்பிடுறதால உடம்பு பலவிதமான பிரச்னை சந்திக்கும். உடலுக்கு வேண்டிய எனர்ஜியை விட்டமின்கள்தான் கொடுக்குது. இருந்தாலும் விட்டமின்களை இயற்கை உணவுகளிலிருந்துதான் பெற்றுக் கொள்ளணும். மருந்துகள் மூலமா எனர்ஜியை பெற முயற்சிப்பது ஆபத்தாகத்தான் முடியும்.

  • ரொம்ப குண்டா இருக்கறவங்க நாம் இளைக்க மாட்டோமோன்னு மனதுக்குள்ள புலம்புற மாதிரி ஒல்லி இருக்கிறவர்களும் 'இன்னும் கொஞ்சம் உடம்பு விழாதா?' என்று ஏங்குறது உண்டும். ஆனா ஒல்லியா இருக்குறவங்க, தங்களுக்கு ஏதோ நோய் இருக்கிறதாலதான் நமக்கு உடம்பு விழ மாட்டேங்குதோன்னு மனசுக்குள்ளே நொந்து நூலாய் ஆகிடுறாங்க. அப்படி நெனைக்கறது ரொம்பவும் தப்பு. ஒல்லியா இருக்கிறது நோயின் அடையாளம் இல்லீங்க. சிலர் காசநோய் இருக்குமோ, வேற ஏதாவது வியாதியா இருக்குமோ ஓடிச்சென்று எக்ஸ்ரே எடுக்கறதும், இரத்தம் டெஸ்ட் எடுக்குறதும் எல்லாரை பயமுறுத்தி பயந்து நடுங்குகிறாங்க. இதனால நெறைய பணம் செலவானதுதான் மிச்சம். காச நோய் இருந்தா, எடை குறையும். அடிக்கடி ஒரே மாதிரியா காய்ச்சல் வரும். உடல் வெளுக்கும். இந்த அடையாளங்கள் எதுவும் இல்லாத பட்சத்துல கவலையே படவேண்டாம். இன்னும் சொல்லப் போனா குண்டா இருக்கறவங்களைவிட ஒல்லியாக இருக்கறவங்கதான் நெறைய நாட்கள் இருக்காங்களாம்.

  • இளமைக் காலத்துல முகப்பரு வர்றது சகஜமான விஷயம்தான். அதுக்காக கடையில விற்குற கண்ட கண்ட மருந்துகளை தவிர்த்துட்டு சாப்பிடுற விஷயத்துல கொஞ்சம் கவனம் செலுத்தணும்ங்க. இந்த மாதிரி நேரத்துல காய்ச்சிய பசும்பால் சாப்பிடணும். பழங்கள், காய்கறிகள் நெறைய சேர்த்துக்கணும். ஸ்வீட் அதிகமாக சாப்பிடாம கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்கணும். டைமுக்கு கரெக்டா சாப்பிட்டுறனும். மலச் சிக்கல் ப்ராப்ளம் இருக்கக் கூடாது. நெனைச்ச போதெல்லாம் ஸ்வீட் சாப்பிடுறததை தவிர்த்துட்டா போதும் முகப்பருவுக்கு "டாட்டா" தான்.

  • காதுகளில் அழுக்கு சேர்ந்துவிட்டாலே உடனே குச்சி, ஊக்கு, ஹேர்பின் போன்றவற்றை காதுக்குள்ளே விட்டு குத்தி கிளறுவதை தவிர்க்கணும். ஏன்னா காதுகள் ரொம்பவும் மெல்லிய நரம்பு ஜவ்வுகளால் ஆனவை. உள்ளே குத்துவதால் நரம்பு அல்லது ஜவ்வுகள் கிழிஞ்சுடுச்சுன்னா காது அப்புறம் 'டமார்' தான். எனவே காதுக்குள்ளே அழுக்கு சேர்ந்துட்டா டாக்டர்கிட்ட போயி சிகிச்சை எடுத்துக்கறதுதான் நல்லப் பிள்ளைக்கு அழகு.

  • இன்னைக்கு ‘மேக்கப்’ சாதங்களை பயன்படுத்தாத பெண்கள் யாருமே இல்லன்னு சொல்லலாம். இது ஆண்களையும் விட்டுவெக்கல. முகம் அழகா இருக்கணும்ங்கிறதுக்காக கண்ட கண்ட கண்ட மருந்துகளையும், வாசனை பொருட்களையும் பவுடர், பயன்படுத்தறதால முகம் மட்டுமில்ல உடம்புல எங்கெல்லாம் பூசுறாங்களோ அங்க எல்லாம் தோல் பாதிக்கப்படுதுன்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சுருக்காங்க. இதனால் தோல் நோய்கள் வந்துருது. தோலில் புள்ளிகளோ, புண்களோ, எறிச்சலோ வந்து இம்சை கொடுக்கும். எல்லாருக்கும் இந்த மாதிரி பிரச்னை வர்றதில்ல. ஆனா சிலருக்கு நகத்துல பாலிஷ் போடுறதால நகம் இடுக்குல சதை வீக்கம் வந்துடுது. நகங்களை இயற்கையான அழகாவே விட்டுடணும். இல்லைன்னா தோல் பிரச்னை வரும், டை, கலரிங் பன்றதால சிறுநீரக கேன்சர் வர்றதா கூட டாக்டர்கள் சொல்றாங்க. எனவேதான் தோல் நோய்களிலிருந்து தவிர்க்க டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளை உபயோகித்தால் தோல் நோயிலிருந்து பாதுகாத்துக்கலாம்.

  • நம்ம உடம்பை பற்றி நாம எப்போ கவலைப்படுறோம்? இது ஒவ்வொருத்தரும் தங்களை பற்றி கேட்டுக்க வேண்டிய கேள்வி. ஸ்கூலிலேயோ காலேஜ்லேயோ படிச்சு முடிந்ததும் வேலை தேட ஆரம்பிச்சுறாங்க. படிப்பு முடிஞ்சதுமே எல்லாருக்கும் வேலை கிடைச்சுறதில்ல! இப்படி தேவை தேடுதல், பணம் சம்பாதிக்கணும், கல்யாணம் பண்ணனும், வாழ்க்கைத் துணையை நல்லா பார்த்துக்கணும், குடும்ப பொறுப்புகள் எல்லாம் முடிஞ்சு முப்பத்தைந்து நாப்பது வயசிலதான் உடம்பை பற்றி சிந்திக்கவே ஆரம்பிக்கிறாங்க. அதுக்கப்புறம் இளமையையும், அழகையும், உடல் நலத்துலயும் நெனைச்சு பார்த்து ரொம்பவும் ஃபீல் பண்ணுவாங்க. அப்படியெல்லாம் எவ்வளவு துன்பம் பிரச்னைகள் இருந்தாலும் உடற்பயிற்சி செய்து உடல் நலத்தை சின்ன வயசிலேயே கவனிக்க ஆரம்பிச்சுட்டா எந்த நோயும் நம்மை அண்டாது.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M