உடல் வலிமை பெற 20 யோசனைகள்
புத்துணர்ச்சி உண்டாக: துளசி இலைகளை செப்பு பாத்திரத்தில் இரவு நீரில் ஊற வைத்து காலையில் பருக வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்தி கூட: அருகம்புல்சாறு 14 அவுன்ஸ் தினந்தோறும் அருந்த நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
உடல் அலுப்பு தீர: மிளகை நெய்யில் வறுத்து தூள் வெல்லம், நெய் சேர்த்து கிளறி 5 கிராம் சாப்பிட்டு வர உடல் அலுப்புத் தீரும்.
உடல் குளிர்ச்சி பெற: ரோஜா இதழ்களை இடித்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்க்கலாம்.
நரம்புத் தளர்ச்சி நீங்க: மாதுளம் பழச்சாறு தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர நீங்கும்.
உடல் பலம் பெற: பப்பாளி பழம் தினமும் சாப்பிடலாம்.
சுறுசுறுப்பாக இருக்க: சுக்குப்பொடி அஸ்மாட்டில் கலந்து உண்டு வரலாம்.
நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக: அதி மதுரம் 35 கிராம், சோம்பு 35 கிராம், சர்க்கரை வேர் 17 கிராம் கொடி வேலி பட்டை 17 கிராம் பவுடராக்கி காலையில் கால் ஸ்பூன் சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி கூட: ஆலமரத்து பட்டையை அரைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து பருகி வரலாம்.
உடல் வெப்பம் தணிய: அஸ்வகந்தி இலையை பச்சையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வர தணியும்
உடல் வளர்ச்சி பெற: உருளைக்கிழங்கு சிறுவர்களுக்கு நல்ல உணவு அதிகமாக சேர்த்து வர... வளர்ச்சி பெருகும்.
நரம்புகள் பலப்பட: பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி மாலை மட்டும் சாப்பிடலாம்.
கண் பார்வை தெளிவடைய: கறிவேப்பிலை துவையல் உண்ணலாம்
முகம் வளுவளுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும்இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தடவ வேண்டும்.
முகச் சுருக்கம் மறைய: முட்டை கோஸ் சாறை முகத்தில் தடவி வர மறையும்.
முகம் பளபளக்க: காலையில் எழுந்ததும் அவரை இலைச்சாறை முகத்தில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளித்து வர முதுகு பளபளப்பாகும்
உடல் நிறம் சிவப்பாக: செம்பருத்தி பூவை நீரில்போட்டு அரை மணி நேரம் கழித்து அந்த நீருடன் பூவையும் அரைத்துச் சாப்பிட்டு வர உடல் நிறம் சிவப்பாகும்.
தழும்புகள் மறைய: அவரை இலை சாறு தினமும் தேய்த்து, காய்ந்த பின் குளிக்க மறையும்.
முகத்தில் வரும் கட்டிகள் மறைய: சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ, கட்டிகள் வராது.
தோல் பளபளக்க: எலுமிச்சம்பழம், நெல்லிக்காய், நிலக்கடலை இலைகளைச் சாப்பிட்டு வந்தால், பளபளப்பாகும்.
இதைச் செய்து பாருங்கள். உங்களுக்கும் உடம்பு நன்றாக முறுக்கு ஏறும். சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
உடல் நலம் பற்றி சில பொருளாதாரம்
பழங்களின் பலன்: அந்தந்த காலங்களில் கிடைக்கும் பழவகைகள் தவறாது எடுத்துக் கொள்ளவேண்டும்.
முட்டை: 6 வயது சிறார் முதல் 90 வயது முதியோர் வரை தினம் ஒரு முட்டை (நாட்டுக்கோழி) வேகவைத்து சாப்பிடலாம்.
மருந்து சாப்பிட்டு வரும் காலங்களில்: அவரைக்காய், நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட நோய் விரைந்து குணமாகும்.
சாப்பாடு: வெது வெதுப்பாகவோ, சூடாகவோ சாப்பிட வேண்டும்.
மேனி பளபளப்பு பெற: ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
தூக்கம்: சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நல்ல தூக்கம் வரும்.