‘அழகு’ இந்த வார்த்தையை கேக்கும்போது, எவ்ளோ சந்தோஷமா இருக்கு பாருங்க. அழகுங்குற விஷயம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு எவ்ளோ முக்கியம்னு உங்க எல்லோருக்குமே தெரியும். அதே நேரத்துல ஏதோ பார்ப்பதற்கு ‘பளபள’ன்னு வசீகரமா நம்பள வெச்சுக்குறது மட்டுமே அழகு இல்லீங்க. மனசு சந்தோஷமா இருக்கணும். உடல் ஆரோக்கியமா இருக்கணும். ரெண்டும் ஆரோக்கியமா அமைஞ்சுட்டா நாமதாங்க உலக அழகி.
உலகத்திலேயே யார் அழகுன்னு கேட்டா நீங்க யார் யாரையெல்லாம் சொல்லுவீங்கன்னு தெரியும். ஆனா எங்கிட்ட கேட்டா நம்ம முகம்தான் நமக்கு அழகுன்னு சொல்வேன். அந்தளவுக்கு நம்ப மேல நமக்கு நம்பிக்கை வரணும்ங்க. அப்போதான் நம்ப மேல நமக்கே அக்கரை வரும். அக்கரை வந்தா போதும், அழகும் ஆரோக்கியமும் தானா வர்றதை நீங்களே உணர்வீங்க.
முகத்தை ஃப்ரஷ்ஷா வெச்சுக்கிறதுக்கு என்ன செய்யலாம்?
- முதலாவது தண்ணீர் மாதிரி ஓர் வரப்பிரசாதம் எதுவுமே கிடையாதுங்க. அதனால, நெறைய தண்ணீர் குடிக்கணும்.
- இரண்டாவது பச்சைத் தண்ணீரால் அடிக்கடி முகத்தை வாஷ் பண்ணணும்.
- மூன்றாவது ‘ஒரு நிமிடம் ரிலாக்ஸ்’.
- நான்காவது ‘இனிமையான தூக்கம்;
- ஐந்தாவது, கார்போனேடட் தண்ணீருக்கு ‘தடா’,
- ஆறாவது மினிமம் ட்ரெஸ்ஸிங்.
இதை கரெக்டர் ஃபாலோ பண்ணினாலே வாடிப் போயிருக்கிற நம்ப முகம் ஃப்ரெஷ்ஷாகி பளபளன்னு ஜொலிக்க ஆரம்பிச்சுடும்.
தண்ணீர் நிறைய பருகவும்
இயற்கை நமக்கு அருளிய வரப்பிரசாதம் எதுன்னா அது தண்ணீர் தான். நம் உடலின் பெரும்பாலான பகுதி தண்ணீரைக்கொண்டது. நம் உடலின் ‘நீர் காம்போசிஷன்’ என்று பார்த்தால் இரத்தத்தில் 83 சதவீதம், தசைகளில் 75 சதவீதம், மூளையில் 74 சதவீதம், எலும்புகளில் 22 சதவீதமாக உள்ளது. குறைவான அளவில் தண்ணீர் பருகுவது இரத்த ஓட்டத்தில் கூட ஏகப்பட்ட பிரச்னைகளை உண்டு பண்ணும். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் பருகணும்னு ஒரு அளவு இருக்கு. சராசரி பெண் 2.4 லிட்டர். அதாவது 9 கப். சராசரி ஆண் 3.0 லிட்டர் அதாவது 12.5 கப். கர்ப்பிணி பெண் - 3.0 லிட்டர். அதாவது 12.5 கப். இதிலிருந்தே தெரிஞ்சுருக்கும் தண்ணீர் எவ்வளவு மகத்துவமானது என்று. அது மட்டுமில்ல, தண்ணீர் ஓர் இயற்கை அழகு சாதனமும் கூட. எந்த அளவுக்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு முகத்தில் ஓர் அழகிய பொலிவு தோன்றும்.
இதை முயற்சி செய்து பாருங்களேன்
நீங்கள் போக வேண்டிய ஒரு திருமணமோ அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சியோ அடுத்த வாரம் வருகிறது என்றால், ஓர் சூப்பர் ஐடியா என்னிடம் உள்ளது. அதாவது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நிறைய தண்ணீர் பருகி வாருங்கள். முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். அதுவும் நிகழ்ச்சி அன்று ஒரு தனி தேஜஸ் தெரியும்.
தண்ணீரைப் பற்றிய தவறான கருத்துகள்
சிலர், தண்ணீர் அதிகமாகப் பருகுவதால் உடல் எடை குறையும் என்பார்கள். உண்மையல்ல. அதை நம்ப வேண்டாம். உண்மையான லாஜிக் என்னவென்றால், சாப்பிடும் முன் ஓரிரு க்ளாஸ் பருகினால், உணவு அதிகமாக சாப்பிட இயலாமல் அதனால் எடைகுறைவு ஏற்படலாம். மற்றபடி தண்ணீர் அருந்துவதால் எடை குறையும் என்பதெல்லாம் ச்சும்மா.
அப்புறம் தண்ணீரைப் பற்றிய முக்கியமான விஷயம். எப்போதும் பச்சைத் தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். மிகவும் சூடான அல்லது குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவுவதை தவிர்த்து விடுங்கள். வெது வெதுப்பான தண்ணீரோ அல்லது மிதமான சூட்டில் (குழாய்) உள்ள தண்ணீரிலோ உங்கள் முகத்தைக் கழுவுவதுதான் பெட்டர்.
குளித்துவிட்டு ஆடை அணிந்து வெளியே செல்கிறோம். கழுத்து மற்றும் கை, கால் பகுதிகளில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும் தூசுகள் அப்படியே பிடித்திருக்கும். எனவேதான் வெளியே சென்று வீட்டுக்குள் வரும்போது ‘‘முகம், கை கால் கழுவிவிட்டு உள்ளே வா’’ என்கிறார்கள் நம் வீட்டுப் பெரியவர்கள்.
முகத்தைக் கழுவுவதில் கூட சில முக்கிய அம்சங்கள் உண்டு
- முன்பே சொன்னது போல இதமான தண்ணீர்தான் பயன் படுத்த வேண்டும்.
- ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்திலிருந்து ஆறு முறையாவது முகம் கழுவ வேண்டும்.
- ஐந்து அல்லது ஆறு முறை முகம் கழுவும்போது இரண்டு முறை மட்டும் சோப் யூஸ் பண்ணலாம்.
- இரவு உறங்குவதற்கு முன் மறக்காமல் முகம் கழுவுங்கள்.
இவ்வாறெல்லாம் செய்வதால் முகத்தில் சுருக்கம் வருவதையும், பருக்கள் வருவதையும் தவிர்க்கலாம்.
அதென்ன ஒரு நிமிடம் ரிலாக்ஸ்?
"If you let go a little, you will have little peace"
"If you let go a lot, you will have even more peace"
அதனால், நான் சொல்லும் இந்த ஒரு நிமிடத்திற்கு உங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். உங்களுக்குள் ஒருவித அழகிய அமைதி நிலவ வேண்டும்.
சரி. எப்படி செய்வது? நீங்கள் இருக்கும் இடத்திலேயே, வீடாக இருந்தாலும் ஆபீஸாக இருந்தாலும் சரி ரிலாக்ஸாக செய்யலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
1......
2.....
3.....
ஹலோ... என்ன யோசிக்கிறீர்கள்? ஒன்றும் செய்யாமல், முதலில் கண்ணை மூடி மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட வேண்டும் அவ்வளவுதான். எவ்வளவு ஈஸியா இருக்கு பாருங்களேன்! ஆனால் ஒரு முக்கியமான கண்டிஷன். அந்த ஒரு நிமிடத்தில் நீங்கள் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. ஏனென்றால், அப்போதுதான் உங்கள் மனதில் இருக்கும் பரபரப்பை, பதட்டத்தைக் குறைத்து நரம்புகளுக்கும் மனதிற்கும் ஓர் அமைதியைக் கொடுக்கும்.
ஒரு மாதம் தொடர்ந்து இதைச் செய்து வாருங்கள். You will be a relaxed person.
"Take just a moment of quiet even one breief minute of seventy is powerful" - Down Groves, Author of meditian for busy people...