சருமம் உலராமல் இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய அற்புதமான ஃபேஷியல்.

தேவையான பொருள்கள்:
  • 1/2 கப் பார்லி வாட்டர்,
  • உலர்ந்த திராட்சையிலிருந்து எடுக்கும் எக்ஸ்ட்ராக்ட் 1/2 கப்,
  • ஆப்பிள் பழ பல்ப் - 1/4 கப்,
  • ஆரஞ்சு பழ பல்ப் - 1/4 கப்,
  • இளநீர் - 1/4 கப்,
  • முல்தானி மிட்டி - 4 தேக்கரண்டி.
செய்முறை:
  1. முதலில் முகத்தை நன்றாகக் கழுவுங்கள். சோப் உபயோகிக்க வேண்டும். (அதற்குப் பதிலாக கடலை மாவோ அல்லது பயத்த மாவோ கொண்டு முகத்தைக் கழுவலாம்).
  2. பார்லி வாட்டரை ஒரு பஞ்சினால் தோய்த்து முகம் முழுவதும் தடவவும். இது உடனே காய்ந்து விடும். மீண்டும் ஒருமுறை செய்யவும். இது முகத்தில் வரும் வியர்க்குருவைப் போக்க மிகவும் உதவும்.
  3. உலர்ந்த திராட்சை எக்ஸ்ட்ராக்ட்டை ஒரு பஞ்சில் நனைத்து அதன் மேல் பூசவும். இதில் உள்ள ஆல்ஃபா ஃஹைட்ராக்சி ஆசிட் முகத்தைப் பளிச்சிடச் செய்யும்.
  4. அடுத்ததாக ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பல்ப் இரண்டையும் நன்கு மசித்து முகத்தில் ஒரு ‘காஸ்’ துணியை வைத்து விட்டு, அதன் மீது வைக்கவும். அதன் சாறு உள்ளே இறங்க 10 நிமிடங்கள் ஆகும். பின்பு, ‘காஸ்’ துணியை எடுத்து விட்டு முகத்தை மேல் நோக்கியும், வட்ட வடிவமாகவும் மஸாஜ் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகலும். சருமம் புதுப்பிக்கப்படும்.
  5. முகத்தைக் குளிர்ந்த நீரில் துடைத்து விட்டு, 1/4 கப் இளநீரில், 2 தேக்கரண்டி முல்தானிமிட்டியை கலந்து ஒரு ‘ப்ரஷ்’ கொண்டு, முகம், கழுத்து மற்றும் கைகளிலும் கூட பூசவும். அரை மணி நேரம் ஊற விடுங்கள். சருமம் மிகவும் குளுமையாகிவிடும். அதன் பிறகு முகத்தை (கழுத்து, கைகளையும்) குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் இப்பொழுது பளிச்சோ பளிச்.

நிறைய இளம்பெண்களுக்கு இப்பொழுதுள்ள பிரச்னை முன் கழுத்து கறுப்புதான். மேற்கூறிய இந்தப் பழ சிகிச்சையைக் கழுத்துப் பகுதிக்கும் சேர்த்துச் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும். இந்தச் சிகிச்சையை வாரம் ஒருமுறை கூட இந்தக் கோடை முடியும் வரையில் செய்யலாம்.

வீட்டில் உள்ள பொருள்களும், சிகிச்சைகளும்.

  • தக்காளி   தக்காளி ஜூஸ் 2 டீஸ்பூன் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவினால் முகம் பளிச்சிடும்.

  • வெந்தயம்   வெந்தயத்தை லேசாக சூடாக்கி மிக்ஸியில் அரைத்து (4 தேக்கரண்டி அளவு) வெந்நீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு, அதனுடன் 1/4 கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசலாம். பொடுகு உடனே நீங்கும்.

  • காபி பவுடர்   நல்ல ஸ்டராங்கான காபி டிகாக்ஷனை முடியில் படுமாறு தடவி 10 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசினால், முடி கறுப்பாகவும், மினு மினுப்பாகவும் தோற்றமளிக்கும்.

  • உருளைக்கிழங்கு   ஓர் உருளைக் கிழங்கை, பச்சையாகத் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 டீஸ்பூன் டீ டிகாக்ஷனைக் கலந்து வைத்துக் கொள்ளவும். சுத்தமான பஞ்சை (இரண்டு) அதில் நனைத்து கண்களின் மீது வைத்துப் பாருங்கள். கருவளையம் இருக்குமிடம் தெரியாமல் மறையும்.

  • தேன்   தேன் சிறந்த மருந்து மட்டுமில்லை, ஒரு சிறந்த அழகு சாதனப் பொருளும் கூட. தூய தேனை முகத்தில், முடியில் படாமல் தடவுங்கள். (இது நல்ல மாய்ஸ்சரைஸர்). 20 நிமிடங்கள் ஊறிய பிறகு இளஞ்சூடான நீரினால் முகத்தைத் துடைக்கலாம். இரண்டு - மூன்று வயது குறைந்தது போலத் தோற்றமளிக்கும் உங்கள் சருமம்.

  • ஐஸ் வாட்டர், ஐஸ் க்யூப்   ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் க்யூபை முகத்தில் தினமும் 5 நிமிடங்கள் தடவினால், என்ன வயதாகிறது என்று தெரியாமல் ஏமாற்றலாம்.

  • பால்   பாலில் உள்ளது லாக்டிக் ஆசிட். கை, கால்கள் சொரசொரப்பாக இருந்தால், 1/2 கப் பாலை (காய்ச்சாத பால்) கைகளிலும், கால்களிலும் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு கழுவினால் சொரசொரப்பு நீங்கி, மிருதுவாகும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M