கண் விழிக்க - பனை வெல்லத்துடன் சிறிதளவு ஏலக்காய் அல்லது லவங்கம் (கிராம்பு) சேர்த்து மெதுவாக மென்று, சுரக்கும் நீரை சிறிது சிறிதாக விழுங்குங்கள். தூக்கம் பறந்துவிடும்.
இரவில் உணவருந்தியபின், ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள். நிம்மதியாகத் தூங்கலாம்.
கசகசா 1 டீஸ்பூன் எடுத்து முந்திரிப்பருப்பு 2 சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காய்ச்சி, சிறிது கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டுவர, தூங்கும் சக்தி வரும். 10 நாட்களாவது தொடர்ந்து சாப்பிடவேண்டும். ஒருமாதம் வரை சாப்பிட்டால் ஒரு இடைவேளை தேவை. இம்மருந்து சிறியவர்களுக்கும், 50 வயதுக்குமேல் ஆனவர்களுக்கும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அதுவே பழக்கமாகிவிடும்.
ஜடாமாஞ்சி என்ற மூலிகை 300 கிராம் வாங்கி இடித்துச் சலித்து சூரணம் செய்து சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து ஒரு புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் சாப்பிடவும். இது தூக்கத்தை உண்டாக்கும். மேலும் இந்த மருந்து நல்ல உடல் தேற்றி ஆகவும் செயல்படும். தினமும் படுக்கப் போகுமுன் இந்த மருந்தைச் சாப்பிடவும்.
மாலையில் 2 ஸ்பூன் தேன் சாப்பிடுங்கள். இரவில் வேறு ஒன்றும் சாப்பிடாதீர்கள். நன்றாகத் தூக்கம் வரும்.
வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி, சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும். நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.
படிகாரத்தை நீரில் கரைத்து வாய் கொப்பளித்து வந்தால், தூங்கும்போது வாயில் நீர் வடியும் நோய் குணமாகும்.
தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு இரண்டு ஆப்பிள் பழங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் இந்த பழங்களை அரைத்துப் பாலில் கலந்து கொடுங்கள். சில நாட்களில் இந்த நோய் குணமாகும்.
இரவில் தூக்கம் வரவில்லை என்றால், கசகசாவைத் தூள் செய்து வைத்துக் கொண்டு, படுக்கப் போகும் போது, அதைப் பாலில் கலந்து சாப்பிடுங்கள். சுகமான தூக்கம் வரும்.
துலையணைக்கு அடியில் சிறிது படிகாரத்தை வைத்துக் கொண்டு, தூங்கினால் பயங்கரக் கனவுகள் வராது. படிகாரத்திற்கு இப்படி ஒரு சக்தி.
எல்லா அக்குபிரஷர் புள்ளிகளும் கால்களில் முடிவதால் தினமும் இரவில் படுக்கும் முன்பு இரண்டுகால்களையும், நன்றாக அழுத்தித் தேய்த்துவிடுங்கள். நன்றாகத் தூக்கம் வரும். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். பல நோய்கள் குணமாகும்.