தலை - Head (2)

தலை வலி

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. சாதாரண டென்ஷன் தலைவலி முதல் தாங்க முடியாத மூளைக் கட்டி தலை வலி வரை பல உள்ளன. தலை வலி வரும் காரணங்கள் உடல் ரீதியானது, என்றும் மன ரீதியானது என்றும் பிரிக்கலாம்.

அதிக நேரம் பசியுடன் இருத்தல், வெயிலில் அலைதல், அதிகமான உடல் உழைப்பு, தூக்கமின்மை, அதிகக் களைப்பு, சளி, சுரம், அஜீரணம், கண்களில் கோளாறு இவை உடல் ரீதியான சாதாரண காரணங்களாகும்.

சிறு நீரகம் பழுது அடைதல் "க்ளுக்கோமா - Glaucoma" அதாவது கண்ணின் அழுத்தம் அதிகரித்தல், மெனிஞ்சைடிஸ் என்ற மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி இவை உடல் ரீதியான ஆழ்ந்த காரணங்களாகும்.

உணர்ச்சி வசப்படுதல், கோபம் பயம் துக்கம் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்தல், போதிய சுதந்திரமற்ற அடக்கு முறையான சூழ்நிலையில் வளர்ந்த அன்பற்ற சூழ்நிலை, நெடு நாட்களாகத் தீர்க்க முடியாத பிரச்சனைகள், பணப் பிரச்சனையால் ஏற்படும் மன அழுத்தம் இவை மன ரீதியான காரணங்களாகும்.

உடல் ரீதியான காரணங்களால் வரும் தலைவலியைக் கட்டுப்படுத்தலாம், குணப்படுத்தலாம். ஆனால் மன ரீதி ஆன பிரச்சனைகளால் ஏற்படும் தலைவலியைக் கட்டுப்படுத்துதல் மிகக் கடினம்.

தலைவலிக்காக கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மருந்துகளால் தலைவலி தீர்வதில்லை. உள்ளுக்குள் அடக்கி வைக்கப் படுகிறது. அவ்வப்போது வெளியே வந்து தலை காட்டுகிறது. இம்மாத்திரைகளை அடிக்கடி உபயோகிப்பதால் இதயக்;கோளாறு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

தலைவலிக்கு அக்குபிரஷர் சிகிச்சை

அக்குபிரஷர் முறையில் தலைவலிக்கு சில எளிமையான தீர்வுகள் உள்ளன. பல வருடங்களாக துன்பம் கொடுக்கும் மைக்ரேன் தலைவலியைக் கூட இம்முறையில் எளிதில் முற்றிலுமாகக் குணப்படுத்தலாம். மன ரீதியான காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு அக்குபிரஷர் முறையில் மனோரீதியான சிகிச்சை செய்ய சில புள்ளிகள் உள்ளன.

டென்ஷன் தலைவலி

கை கட்டை விரல் நகத்தின் அடியில் இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் இவற்றின் உதவியால் இரு பக்கங்களிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். சில முறைகள் செய்தபின் தலைவலி குறைந்து விட்டால் அழுத்தம் கொடுப்பதை நிறுத்திவிடலாம். 14 முறைகள் அழுத்தம் கொடுத்தும் நிற்காவிட்டால் மற்றொரு கை கட்டை விரலில் அழுத்தம் கொடுக்க வேண்டும். தலைவலி மாயமாய் மறைந்து விடும்.

மைக்ரேன் தலைவலி

மைக்ரேன் தலைவலிக்கும் இந்தக் கட்டைவிரல் அழுத்தம் பொருந்தும். கை கட்டை விரல்களில் அழுத்தம் கொடுத்து பிறகு கால் கட்டை விரல்களிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் தலைவலி வருவதைத் தடுக்கலாம். இதைத் தவிர கண்களின் வெளிப்புறத்தில் உள்ள புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். ஒவ்வொரு புள்ளியிலும் தனித்தனியே அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். காலில் உள்ள புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இது போன்று அழுத்தம் கொடுத்து விலக்குவதால் தலைவலி அடிக்கடி வருவது குறைகிறது. பிறகு முற்றிலுமாகக் குணம் தெரிகிறது.

மைக்ரேன் தலைவலி பெருந்தலைவலி ஆகும். வந்தால் இலேசில் நம்மை விட்டு அகலாது. தலையின் ஒரு பாகத்தில் ஆரம்பித்து பல இடங்களுக்குப் பரவும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் இவை ஏற்படும். சாப்பாடு பிடிக்காது. தூங்க முடியாது. கண் இருண்டு வரும். இந்த நிலை வாரக்கணக்கில் நீடிக்கும்.

பித்த நீர் குறைவாகச் சுரப்பதால் வயிற்றில் அமிலத் தன்மை அதிகமாகி அசிடிடி உண்டாகிறது. உணவு செரிப்பது கடினமாகிறது. அதனால் இந்நிலை ஏற்படுகிறது. அதிகமான மின் ஒளியில் வேலை செய்தல், அதிக நேரம் டிவி, வீடியோ பார்த்தல், அதிகமான சத்தம், சீஸ், சாக்லேட் மற்றும் ஆல்கஹால் போன்ற பொருள்களினால் ஏற்படும் ஒவ்வாமை இவை.

மைக்ரேன் தலைவலியின் சில காரணங்களாகும். வாரிசுகளையும் பாதிக்கலாம் கல்லீரல் மெரிடியன், பித்தப்பை மெரிடியன் இவற்றில் சக்தி பாய்வதில் தடங்கல் ஏற்படுவதால் மைக்ரேன் தலைவலி உண்டாகிறது.

இந்த மெரிடியன்களில் அக்குபங்சர் சிகிச்சை செய்வதால் மைக்ரேன் தலைவலிக்கு உடனடி தீர்வு காணலாம். இந்த மெரிடியன்களில் காற்றின் சக்தியைக் குறைப்பதால் தலைவலி மறைகிறது.

மைக்ரேன் தலைவலிக்கு மனதின் உணர்ச்சிகளே காரணம். உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மனதிற்கு உள்ளேயே புதைத்து வைக்கும் போது அது மைக்ரேன் தலைவலியாக வெளிப்படுகிறது. அது பல காரணங்களால் நம்மிடமே ஒட்டிக்கொண்டு வளரவும் செய்கிறது. மன ரீதியாகவும் சிகிச்சை செய்ய அக்குபங்சர் முறையில் வழி உள்ளது. வருத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியை அதிகரித்து பயத்தைக் குறைத்து கோபத்தைக் குறைத்து என்று சில புள்ளிகளில் அக்குபங்சர் செய்து மன உளைச்சல்களால் ஏற்படும் தலைவலியையும் முழுவதுமாக நீக்கலாம்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M