தலைசுற்றல்
அடிக்கடி பித்தம் தலைசுற்றல் மற்றும் தோல் வியாதிகள் வருபவர்களுக்கு நிரந்தர குணம் தெரிவதற்கு கொத்தமல்லி விதை (தனியா) பச்சையாக ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த உடைத்த தனியாவை ஒரு கை அள்ளி, கொதித்த வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். தேவையானால் சிறிது நேரம் கொதிக்க வைக்கலாம். பிறகு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். உடலில் கெட்ட நீர் பிரிந்து ரத்தம் சுத்தமாகும்.
கொத்தமல்லி கசகசா பருத்திவிதை இம்மூன்றையும் சம அளவு எடுத்து தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை போட்டு வெந்நீர் குடிக்க, தலைச்சுற்று, கிறுகிறுப்பு நீங்கும்.
அடிக்கடி தலைசுற்றல் இருந்தால் ரத்தஅழுத்தம் இருப்பதாக அர்த்தம். முற்றிய இஞ்சியை நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிடுங்கள். தலைச்சுற்றும் நிற்கும். பிளட் பிரஷரும் குறையும்.
வெண்தாமரைப்பூவின் இதழ்களைத் தூளாக்கி காப்பி டிகாக்சனைப்போல் தயாரித்து பாலில் ஊற்றிச் சாப்பிடுங்கள். தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, குணமாகும்.
50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பையும் சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு தலைச்சுற்றல் வயிற்றுப் பொறுமல் பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
வயது நாற்பதா? லேசான தலைசுற்றல் வரும். இதைத்தடுக்க கொத்தமல்லி வைத்தியம்.
சந்தனம், கொத்தமல்லி விதை, நெல்லி வற்றல் மூன்றையும் சம அளவு சேர்த்து இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடித்தால் தலை சுற்றல் நிற்கும். அபாயமில்லாத பலன் கொடுக்கும்.
துலைச்சுற்றல் ஏற்பட்டால், ஏலக்காயை இடித்து பனைவெல்லம் கலந்து சாப்பிடவும்.
ஒரு துண்டு இஞ்சி இடித்து சாறு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால், தலை சுற்றல் குறையும்.
பித்தத்தினால் தலை சுற்றலா? ஒரு துண்டு இஞ்சி, 1 ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து வடிகட்டி, இலேசாக சுடவைத்து, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து 1 மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிட தலைச் சுற்றல் பிரச்னை குணமாகும்.
வெயிலில் வெளியே போய் விட்டு வந்தால் கண்களை இருட்டிக் கொண்டு தலை சுற்றி பூமியே தட்டாமாலை ஆடுவது போல் இருக்கும். கொட்டைப் புளி, ஒரு துண்டு வெல்லம், ஒரு ஸ்பூன் சீரகம் மூன்றையும் ஒன்றாக நசுக்கி, உருட்டி, வாயில் அடக்கிக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டு படுத்துக் கொள்ளவும். தலையணை கூடாது. இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றலும் குறையும்.
தலை பாரம்
நாகலிங்க மரத்தின் இலையை அரைத்து தலையில் அப்பி வைத்து இருந்தால் ஜன்னிக் கோளாறு, தலை பாரம், நீரேற்றம் எல்லாம் பறந்தோடிவிடும்.
மண்டைப் பீனிசம், நுரையீரல் கபம் காரணமாக மழைக் காலத்திலும் குளிர் காலங்களிலும் அடிக்கடி தொல்லையுறும் அனைவருக்கும் துரித நிவாரணமளிப்பது குங்குமப்பூ. சிறிது குங்குமப்பூவை எடுத்து, கற்பூரம் சிறிதளவு எடுத்து இரண்டையும் தேங்காய் எண்ணெய் 20 சொட்டு விட்டு உரைத்து, தலையின் கன்னப் பொட்டு, நெற்றி, கழுத்துப் புறங்களில் தேய்த்து விடவும். அரை மணி நேரத்தில் வலி குறையும். தலை பாரம் நீங்கும். மூக்டைப்பு விலகும். தொடர்ந்து செய்து வர, மண்டைப் பீனிசமும் விலகும்.
தலைபாரம், நீரேற்றம் ஆகியன நீங்க இலவங்கம் (கிராம்பு) 2, சுக்கு ஒரு துண்டு, இரண்டையும் மைபோல அரைத்து, மூக்கு, நெற்றிப் பொட்டு ஆகிய இடங்கள் மீது பற்றிட்டு, சாம்பிராணி அனல் புகை காட்டிட விலகும்.