ஆண்மைக் குறைவு நீங்க
இதற்கும் மூலகாரணமாக அமைவது அறுசுவை உணவில் கசப்புச் சுவை இன்மையே என்று காரணம் கூறிவிடலாம். உப்புச் சுவையை உணவில் மிகவும் குறைத்து, கசப்புச் சுவைக்கு உரிய காய்கறி, கீரை வகைகளை மற்ற நான்கு சுவைகளுடன் கலந்து உட்கொண்டு வரவேண்டும். மேலும் பழ வகைகளை கணிசமான அளவு சாப்பிட்டு வரலாம். பச்சை வெண்டைக்காய் இரண்டை அனுதினமும் மென்று விழுங்கி வர வேண்டும். பயறு, காராமணி, கடலை இவைகளையும், முளைகட்டி வேக வைத்தும் சாப்பிட்டு வரலாம்.
அங்கக் குறைபாடுள்ள குழந்தைகளின் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி?
மனிதர்கள் முறைப்படி உட்கொள்ள வேண்டிய அறுசுவை உணவில் கசப்புச் சுவைக்கு உரிய காய்கறி உணவு வகைகளை உண்ணாமல் விட்டுவிடுகின்ற காரணத்தாலான குறைசுவை உணவால் உடலின்கண் உற்பத்தி ஆகின்ற விந்துவில் ஜீவ உயிரணுக்கள் முழு உருவத்தைப் பெறும் வாய்ப்பினை இழந்து விடுகிறது. கருத்தரிக்கும் "கரு" குறைவடிவம் கொண்ட கருவாக வளர்ந்து, ஊனம் உள்ள குழந்தையாகப் பிறக்கிறது.
மேலும் பொதுவாக "கசப்புச்" சுவையினை பெரும்பாலோர் உண்ணாததால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் முழுச் சக்தியற்றவைகளாகப் பிறந்து ஒழுங்கான வளர்ச்சி அடைவதில்லை. முழு அறுசுவை உணவை உட்கொண்டு நலமான குழந்தைகள் பெறவும்.
தந்தி மேகம்
சிறுநீர் கழிக்கும் போது, தாதுவும் சேர்ந்து வெளியாவதைத் தந்தி மேகம் என்பர் இதில் எரிச்சல், வேதனை ஒன்றும் இல்லாவிட்டாலும், இந்தப் போக்கு உடலைப் பலஹீனப் படுத்தி விடும். வியாதி, அடுத்த கட்டங்களுக்குப் பரவக் கூடியது. அதனால் இதைத் தடுக்க, அரைத் தேக்கரண்டி மருதாணி இலைச் சாற்றோடு, 2 அவுன்சுக்குக் குறையாமல் பாலோ அல்லது நீரோ சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நல்ல குணம் தெரிகிறது. வேண்டும் என்றால் சுவைக்காக, சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
செழிப்பான நாயுருவி இலைகளை எடுத்து மை போல அரைத்து, சுண்டைக்காய் அளவு காலையில் வெறும் வயிற்றில் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க, ரத்த மூலம், சீத பேதி, சிறுநீருடன் நூல் போன்று வரும் தாது (தந்தி மேகம்) யாவும் தீரும்.
குடிபோதை – மயக்கம் – Addiction
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக உள்ளே செல்லட்டும். குடிமயக்கம் உடனே தெளிந்து விடும்.
போதை மயக்கத்தைத் தெளியவைக்க பேரீச்சம்பழத்தைப் பாலில் கலந்து கொடுக்கலாம்.
மது குடிக்கும் எண்ணம் வெறி நீங்கவேண்டுமானால், கொத்துமல்லி விதையை (தனியா) கஷாயம் வைத்து பனங்கற்கண்டு அல்லது எலுமிச்சம்பழம் சாறு கலந்து தொடர்ந்து குடித்து வர காலப்போக்கில் மது குடிக்கும் எண்ணம் குறைந்து போதைக்கு அடிமையாகும் மனப்பான்மை விலகும்.
ஒவ்வாமை – Allergy
ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது ஒன்று உண்டு. அதைச் சேர்த்துக் கொண்டால் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். உடலில் அரிப்பும் ஏற்படும். தடிப்பும் ஏற்படும். இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 (அ) 8 மிளகையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரிப்பும் தடிப்பும் மறையும்.
எக்காரணங்கொண்டும் அலர்ஜி ஏற்பட்டிருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி, மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்.
அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.
தூசி அலர்ஜி – சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை-மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.
உடல் வலி
புளிய இலைகளை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை வெது வெதுப்பாக ஆறவைத்து அதில் குளித்தால் உடம்பு வலி குணமாகும்.
யூகலிப்டஸ் இலையையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து குளித்தாலும் உடல் வலி நீங்கும்.
உள்ளங்கை, கால் அசதி ஏற்பட்டிருந்தாலும், வலி இருந்தாலும் முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சாப்பிட்டால் உடனே சரியாகும்.