காலும் கையும் இழுத்து வலித்துக் கொண்டு இருப்பது தான் காக்கை வலிப்பு எனப் பெயர்.
இது மூளையில் ஏற்படும் சில நரம்புப் பிடிப்புகளால் ஏற்படுவதாகும். இந்த வலிப்பு எற்படும் போது சாதாரணமாக ஒரு கையுங் காலும் தானாக இழுத்து இழுத்து அசைந்து கொண்டிருக்கும். கண்களும் ஒரு புறமாகச் செருகிக் கொண்டிருக்கும். முகம் வெளுத்து விட்டும், வாயில் நுரையும் கக்கி வெளி வந்து கொண்டும் இருப்பதும் சகஜம். ஒரு சிலருக்கு முகப் பாகத்தில் மட்டும் தசைகள் துடித்துக்கொண்டிருக்கும். இது பொதுவாக 2 (அ) 3 நிமிடத்தில் நின்று விடுவதுமுண்டு. ஒரு சிலருக்கு 10 - 15 நிமிடங்கள் தொடர்ந்து இழுத்துக் கொண்டிருப்பதும் உண்டு. மனித உடலில் மூளையின் பாகத்திலிருக்கும் நரம்புகள் இயங்குமிடங்களில் போதிய பசைத் தன்மை குறைவால் மேற்கூறிய நரம்புப் பிடிப்புகள் ஏற்படுகின்றன.
பசைத் தன்மையை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது?
நாம் உண்ணும் உணவில் கடலை எண்ணெய் உபயோகத்தில் ஆறில் ஒருபங்கு சுத்தமான ஆமணக்கெண்ணெய் என்ற விளக்கெண்ணெயை உடன் கலந்து உபயோகப்படுத்தலாம். இந்தக்கலப்பு எண்ணெயில் பலகாரம் தயாரித்தல், தாளித்தல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவதால் நமது உடலில் படிப்படியாக எண்ணெய் பசை மிகுதியாகும். இதனால் கால்-கை வலிப்பு வராமல் தடுக்கலாம்.
வலிப்புள்ளவர்கள் நெடுங்கால உபயோகத்திற்குப் பின்னரே குணமடைய முடியும். மேலும் வலிப்பு தொந்தரவு உள்ளவர்கள் மலச்சிக்கலின்றி இருப்பதற்கான உணவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கால் கை வலிப்புள்ளவர்கள் கீழ்க்கண்ட மூலிகைக் கஷாயம் தயாரித்து கடும் பத்தியத்துடன் இருந்து, ஒரு மண்டலம் அல்லது இரு மண்டலங்கள் குடித்து குணம் காணலாம்.
முற்றிய வேப்பிலை, வில்வ இலை, துளசி இலை 25 கிராம்
இவைகளை மண் பாத்திரத்தில் இட்டு ஒன்றரை லிட்டர் ஊற்றி அரை லிட்டர் கஷாயம் கிடைக்கும்படி சுண்டக் காய்ச்சி சுத்தமான துணியால் வடிகட்டி வைத்துச் சிறிய கடுக்காய் ஒன்று நசுக்கிப்போடவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லிக் கஷாயமும் அருந்தி வரவேண்டும். இந்த கஷாயம் அருந்திவரும் தினங்களில் எந்தவேளை உணவிலும் அறவே உப்புச் சுவை கலக்கவே கூடாது. பாதிப்பைப் பொறுத்து 48 நாட்களோ 96 நாட்களோ மேற்படி கஷாயம் அருந்தி பலன் அடையலாம்.
இந்த வலிப்பு நிற்க: வெள்ளை வெங்காயச் சாறு, வலிப்பு வரும்போது காதுகளில் 4 துளி விட்டு வரவும். அதே சமயம் பேய்ப்பீர்க்கன் சாறு நாசியில் விடவும். இப்படி வலிப்பு வரும் போது எல்லாம் செய்ய பூரண குணம் காணும்.
கை-கால் வலிப்பு நோய் வந்தால், குங்குமப்பூவைத் தேன் விட்டுக் குழைத்து நாக்கில் தடவி வர, வலிப்பு நோய் படிப்படியாகக் குணமாகும். வலிப்பு வந்த பின் ஏற்படும் வலிகள் வராது.
காக்கை வலிப்பு உள்ளவர்களுக்கு நாள்தோறும் ஆகாரத்துடன் வேகவைத்த வெங்காயத்தை, காலை-மாலை இருவேளை கொடுத்து வந்தால், நோயின் வேகத்தைக் குறைக்கும்.
தினந்தோறும் தவறாமல் 50 கிராம் வெங்காயச்சாறினை அருந்திவர காக்கை வலிப்பு நீங்கும்.
அத்திப்பழத்தின் ரசத்தையும் ஆப்பிள் பழத்தின் ரசத்தையும் பாலில் கலந்து சாப்பிட வலிப்பு நோய் விரைவில் கட்டுப்படும்.
எலுமிச்சம்பழச்சாற்றை இளஞ்சூடுள்ள வெந்நீரில் கலந்து அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வலிப்பு நோய் வராது.
குழந்தைகளுக்கு இழுப்புநோய் எனும் கபநோய் வந்தால், வெங்காயத்தை கசக்கி, அதன் சாறில் ஒரே ஒரு துளியைக் கண்களில் விட்டால் போதும். உடனே இழுப்பு நின்றுவிடும்.
பார்லி அரிசித் தண்ணீரில் இளநீரையும் தேனையும் கலந்து சாப்பிட்டால், வலிப்பு நோய் குணமாகிறது. பார்லியும், இளநீரும் நரம்புகளுக்கு வலு ஊட்டுகின்றன.
குங்குமப்பூவைத் தேன் விட்டுக் குழைத்து நாக்கில் தடவி வர, வலிப்பு நோய் வந்தபின் ஏற்படும் வலிகள் வராது. வலிப்பு நோயும் படிப்படியாகக் குணமாகும்.
ஒரு கைப்பிடி வல்லாரையை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் 200 மில்லி பால், 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் அருந்தவும். 48 நாட்கள் அருந்த, நினைவாற்றலைப் பெருக்கும். பைத்தியம், காக்கை வலிப்பு போகும்.
நாகலிங்க மரத்தின் இலையைக் குடிநீர் காய்ச்சி, காலை மாலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், கால், பாதம், விரல்கள் இசிவு நீங்கும்.
மனநோய் - Hysteria
நரம்பு பலவீனமான பெண்களுக்கு ஏற்படும் “ஹிஸ்டீரியா” என்னும் பேய் பிடித்ததாகக் கூறப்படும் நோய். இழுப்பு வாத நோய், வலிப்பு நோய்களுக்கு – பொன்னாவரை இலை, வேர், பூ முதலியவற்றை வகைக்கு 40 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு 3 வேளை கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். அஜீரண வாபு ரோகங்களுக்கும் பயன்படுகிறது.
ஹிஸ்டீரியா நோய் உள்ள பெண்கள், இரவில் மருதோன்றிப்பூவைத் தலையில் வைத்துக் கொண்டால், நல்ல தூக்கம் வரும். இந்த தூக்கத்தினால் மனநோய் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.