குழந்தைகளின் காசநோய் அறிகுறி (Primary Complex)
இந்த அறிகுறியின்போது உடல் அனல்போல கொதிக்கும். இதனைப் போக்கினால்தான் உடல் வளர்ச்சி பெறும். அதிமதுர லேகியம் இதற்குச் சிறந்த தீர்வாகும்.
அதிமதுரம் 200 கிராம், மிளகு - 50 கிராம், சித்தரத்தை - 50 கிராம், சீரகம் - 100 கிராம், சோம்பு - 50 கிராம், சுக்கு - 100 கிராம், ஏலக்காய் - 10 கிராம். இவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்து தனியே வைத்துக்கொள்ளவும். 1 லிட்டர் பசும்பாலில் 1 கிலோ பழுப்புச்சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து பாகு தயாரிக்கவும். கம்பிபோல பாகு பதம் வரும்போது மேற்கண்ட சூரணத்தை, சிறிது சிறிதாகச் சேர்த்து லேகியம் போல கிளறி, பதத்தில் இறக்கியபின், பசுநெய் 200 கிராம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதனை 5 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்த பின் தினசரி காலை, இரவு நெல்லிக்காயளவு எடுத்து சாக்லெட் போல சுவைத்துச் சாப்பிட்டுப் பின் பசும்பாலருந்தி வரவும். இப்படி 2 அல்லது 3 மாதங்கள் சாப்பிட்டுவர குழந்தைகளின் எலும்பை உருக்கும், காசநோய் அறிகுறிகள் நீங்கி, தேக அனல் விலகி உடல் எடை கூடும்.
குழந்தைகளுக்கு சளி இருமல் வருவது சகஜம்தான். இதையே டாக்டர்கள் பிரைமரி காம்ளக்ஸ் என்று சொல்லி, நிறைய ஊசிகள் போட்டு குழந்தைகளைத் துளைத்து எடுத்து விடுவார்கள். 7 துளசி இலைகளை மாலையில் ஒரு கோப்பை ஆறிய வென்னீரில் போட்டு மூடி வைத்துக் காலையில் எழுந்து அரைக் கோப்பை தண்ணீர் மாத்திரம் சாப்பிடவும். மீதம் உள்ள நீரை மாலையில் கொடுக்கலாம். இப்படித் தொடர்ந்து கொடுத்து வந்தால், சளி, இருமல் நீங்கி குழந்தை நன்கு வளரும்.
மூன்று தூதுவளை இலையை நசுக்கி, இரண்டு அவுன்ஸ் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடித்துக் கொண்டு, காய்ச்சிய பசும்பால் இரண்டு அவுன்ஸ் சேர்த்து, வேளைக்கு ஒரு சங்கு அளவு காலை, பகல், மாலை ஆக மூன்று வேளையும் குழந்தைக்குக் கொடுத்து வர, 6 நாளில் குழந்தை மூச்சு விடும்போது போடும் கர்-புர் சப்தம் அடங்கி, குழந்தை நன்கு விளையாட ஆரம்பிக்கும்.
அடிக்கடி ஜலதோஷம், சைனஸ் உள்ள குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட பயந்து ஷாம்பு போடுவார்கள். அது நல்லதல்ல. அடிக்கடி ஷாம்பு போடுவது நல்லதல்ல. அரைக்கிலோ பச்சைப் பயிறுடன், ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் கலந்து, மிஷினில் அரைத்துக் கொள்ளலாம். குளிப்பதற்கு அரை மணி முன்பு, வேண்டிய அளவு எடுத்து வெந்நீரில் குழைத்தால், வெந்தயம் இருப்பதால் நுரைத்து வரும். எண்ணெய் தேய்க்காமலேயே இதை தலையில் தேய்த்துக் குளிப்பாட்டலாம். அழுக்கு பிசுக்கு போய்விடும். வெந்தயம் தலைமுடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆக்கும்.
கடுக்காய்த்தூளை வெந்நீரில் போட்டுக் கொதிக்க வையுங்கள். இந்தத் தண்ணீரில் குழந்தையைக் குளிப்பாட்டினால் ஜலதோஷம் பிடிக்காது.
நல்லெண்ணையில் வசம்பைத் தட்டிப்போட்டு காயவைத்து, சிறு குழந்தைகளுக்குத் தேய்த்தால், எக்காலத்திலும், குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காது.
ஜலதோஷம்: ஒரு வயதுக்குள் குழந்தைக்கு ஜலதோஷம் வந்தால் தாய்ப்பாலில் குங்குமப்பூவைக் கலந்து, பற்றுப் போடுவது நல்லது. சிறிது துளசிச் சாற்றைத் தேனுடன் கலந்து புகட்டலாம். 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விரலி மஞ்சளை இழைத்துத் துளி சுண்ணாம்பு கலந்து நன்கு கொதிக்க வைத்துப் பற்றுப் போடலாம். பெரியவர்கள் ஓமத்தை சிறு துணியில் மூட்டை கட்டி வைத்துக்கொண்டு உறிஞ்சலாம். மிளகை அரைத்து சூடான பற்றுப் போடலாம்.
சளித்தொல்லையால் குழந்தை அவதிப்பட்டால் கால் டீஸ்பூன் விளக்கெண்ணையில் 2 பல் பூண்டை போட்டுக் காய்ச்சி கசக்கி அந்தச் சாறை தாய்ப்பாலில் கலந்து 2 டேபிள் ஸ்பூன் கொடுத்தால், சளி அத்தனையும் மலத்தில் வெளியேறிவிடும்.
5 வயது வரைக்கும் சில குழந்தைகளுக்கு சளி பிடிச்சுச்சுன்னா, மூச்சிறைப்பு, இருமல்னு அவதிப்படும். அதுக்கு வெற்றிலையில் கடுகு எண்ணை பூசி லேசா சூடு காட்டி, குழந்தை மார்பில் வையுங்க. இம்மாதிரி 4-5 முறை செஞ்சா நிவாரணம் கிடைக்கும்.
பயமான சளி, மார்ச்சளி பிடித்துக் குழந்தை கஷ்டப்படும் போது, துளசி இலைச்சாறு, குப்பைமேனி இலைச்சாறு இரண்டும் சேர்த்து 8 துளி உள்ளுக்குக் கொடுத்தால், சில நிமிடங்களில் சளியெல்லாம் வெளி வந்து, குழந்தை சுகமாகத் தூங்கும். பாரிஜாதமலர் - 15, அத்துடன் 5 மிளகு தட்டிப்போட்டு, பசும்பாலில் மலர், மிளகு இவற்றுடன் 5 நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு வடிகட்டி கொடுக்க சளி, சுரம் குணமாகும்.
காச நோய் மற்றும் கணைச் சூட்டினால் இளைத்து எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கும் சிறுவர்களுக்கு, தினம் 100 கிராம் உருளைக் கிழங்கை வேக வைத்து உண்ணக் கொடுப்பது நல்லது. கெடுதல் ஒன்றும் நேராது.
வேப்பம்பூவைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் கஷாயமாகச் செய்து காலை-மாலை அரை அவுனஸ் கொடுக்க, குழந்தைகளுக்கு வயிறு சுத்தப்படும். பசி எடுக்கும்.
பகல் 11 மணிக்கு 1 பிடி சாதத்தில் நன்கு வேகவைத்த மாங்காயை 2 ஸ்பூன் எடுத்து, அத்துடன் காரட் துருவி, நெய் 10 சொட்டு சேர்த்து, பருப்பு சேர்த்துப் பிசைந்து ஊட்டி விடலாம். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள், மறுநாள் அடம் குறைந்து சாப்பிடத் துவங்கும். 3ம் நாள் தாயைத் தேடிவந்து சோறு கேட்கும். மாங்காயிலுள்ள அமினோ அமிலங்களும், ருசியும் குழந்தையின் நாவில், மந்தமாகி இருக்கும் சுவை நரம்புகளுக்கு புத்துயிர் ஊட்டி உணவைச் சுவைக்கத் தூண்டும். குடலில் செரிமானத்தைத் தூண்டி பசியை உண்டாக்கும். கீரைப்பூச்சிகளை மலத்தின் வழி வெளியேற்றும்.