சேனைக்கிழங்கு தொக்கு
தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ, மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, கடுகு - கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் சேனைக்கிழங்கைப் பெரிய துண்டங்களாக நறுக்கி, கழுவி வேக வைத்து நன்றாக மசிக்கவும். பிறகு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இதில், புளியைக் கெட்டியாக கரைத்து விடவும். மசித்த சேனையைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் கசிந்து வரும்வரை சுருள வதக்கி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் ஏற்ற சைட் டிஷ்!
இரண்டு பச்சைமிளகாய் கீறிப் போட்டால் வாசனையும் ருசியும் கூடும்.